Le retour volontaire peut vous y emmener.

L'OFII organise et paie votre voyage de retour. Et nous examinons avec vous si nous pouvons vous offrir un soutien supplémentaire.

J’ai des questions ? L’ofii peut y répondre

எனது முடிவை எடுத்தல்
எனது புறப்பாட்டை ஒழுங்கு செய்தல்
என் நாட்டிற்கு திரும்பிய பிறகு
  • 1. தன்னார்வத் திரும்புதல் என்றால் என்ன?

    நான் என் நாட்டுக்கு திரும்ப விரும்பினால், பிரஞ்சு குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு இலாகா (OFII) நான் நாடு திரும்ப ஏற்பாடு (பயண செலவுகள்,  நிதியுதவி, என் பயண முன்னேற்பாட்டிற்கான நிர்வாக ஆதரவு) செய்யும். ஒரு சாதாரண பயணியின் பயணம் போன்றே என் பயணம் நடைபெறும். எனது நாட்டினுடைய அதிகாரிகளுக்கு எனது வருகை தெரிவிக்கப்படாது. நான் என் மனதை மாற்றினால், புறப்படுவதற்கு முன்பே என் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியும்.

  • 2. OFII -இன் பங்கு என்ன?

    தாயகம் திரும்பவும் அங்கு மறுவாழ்வு பெறவும் சிறந்த முறையில் என் திட்டத்தை ஒழுங்கமைக்க OFII ஆலோசகர் உதவுவார். சில நாடுகளில், சொந்த நாட்டு மறுவாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக, OFII என் தொழில் திட்டத்திற்கு துணையாக இருந்து உதவி செய்யும். மேலும் சொந்த நாட்டிலேயே நான் ஒரு வேலை கண்டுபிடிக்க OFII எனக்கு உதவ முடியும்.

  • 3. தன்னார்வத் திரும்புதலை நான் கோரலாமா?

    தன்னார்வ திரும்புதலுக்கான உதவி கோர,  பிரான்சில் நான் சட்டவிரோத அன்னியர் என்ற நிலையில் இருக்க வேண்டும், அல்லது என்னுடைய புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய சொந்த நாட்டில் நான் விரும்பிய பகுதிக்கு திரும்ப நான் முடிவு செய்யலாம்.

  • 4. நான் மறுவாழ்வு உதவிக்கு விண்ணப்பிக்கலாமா?

    தாயகம் திரும்புதலுக்கான உதவிகள், மற்றும் வேலை அல்லது வணிக உருவாக்கம் ஊடாக சமூக மறுவாழ்வு உதவிகள், ஆகிய இரண்டு விதமான உதவிகளையும் நான் பெறுவதற்கு OFII  உதவலாம். என் திட்டம் சாத்தியமானதா எனபதை என் சொந்த நாட்டிலுள்ள ஒரு தேர்வுக் குழு சோதிக்கும்.

    கீழ்கண்ட இந்த 29 நாடுகளில் OFII மறுவாழ்வு  உதவி வழங்குகிறது : ஆர்மீனியா, பெனின், பர்கினா பாசோ, கேமரூன், கொங்கோ பிராசாவில், காங்கோ (காங்கோ மக்களாட்சிக் குடியரசு), ஐவரி கோஸ்ட், காபோன், கினியா கொனாக்ரி, ஹைட்டி, மாலி, மொரோக்கோ, மொரிஷியஸ், செனகல், டோகோ, துனிசியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, ஈராக், ஈரான், நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சூடான், இலங்கை. என் சொந்த நாடு மற்றும் என் திட்டம் இவற்றை பொறுத்து மறுவாழ்வு உதவி தொகை வேறுபடும். நான் பெறக்கூடிய உதவியைப் பற்றி என் ஆலோசகர் எனக்கு விவரங்களை தெரிவிக்க முடியும்.

    நான் ஒரு மாணவன், ஒரு இளம் தொழில்முறை அல்லது குடிமை சேவை தொண்டர் மற்றும் என் குடியிருப்பு அனுமதி அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் காலாவதியாகிறது என்றால், நான் மறுவாழ்வு நிதியுதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உரிய மறுவாழ்வு நிதியுதவி எனது நாட்டிற்கு வழங்ப்படுகிறதா என்பதை, இங்கு (மாணவர் சிற்றேடுக்கான இணையம்) நான் சரிபார்க்க வேண்டும்.

  • 5. எங்கே விசாரிக்க வேண்டும்?

    எனக்கு மிக அருகில் உள்ள OFII அலுவலகத்திற்கு ("எங்கள் முகவரிகள்" பக்க இணைப்பு) நான் சென்று விசாரிக்கலாம். திரும்புதல்/மறுவாழ்வு ஆலோசகர் என் கோரிக்கையை கவனித்துக்கொள்வார். எஙகளுக்குள் உரையாடலை எளிதாக்க, என் மொழி மொழிபெயர்ப்பாளர் ஒருவரை OFII வரவழைக்கும்.

  • 6. எனது பயணம் எப்படி ஏற்பாடு செய்யப்படுகிறது?

    OFII ஆலோசகருடன் எனது நாட்டுக்கு திரும்பும் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அவரிடம் நான் என் கடவுச்சீட்டை காட்ட வேண்டும். என்னிடம் அது இல்லை என்றால், அவர் ஒரு பயண ஆவணத்தைப் பெறுவதற்கு எனக்கு உதவ முடியும். OFII என் விமான பயண சீட்டு வாங்கும் செலவையும்  மற்றும் தேவைப்பட்டால் புறப்படும் விமான நிலையத்திற்கு போக்குவரத்து செலவையும் ஏற்று கொள்கிறது.

  • 7. நான் எத்தனை பயணப்பெட்டிகளை என்னோடு கொண்டு வர முடியும்?

    புறப்படுவதற்கு முன் OFII எனக்கு அனுப்பிய அழைப்பாணைபில் பயணப்பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் எடை குறிப்பிடப்பட்டிருக்கும். இது சேருமிடம் மற்றும் விமான நிறுவனத்தை சார்ந்தது. எனவே என் பயணப்பெட்டிகள் இந்த வரம்பை மீறாமல் இருக்கும்படி நான் ஓழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும்!

  • 8. எனது புறப்பாடு எப்படி நடைபெறும்?

    புறப்படும்போது,  திரும்புதல்/மறுவாழ்வு ஆலோசகர் விமான நிலையத்தில் என்னை வரவேற்று, என்னை புறப்பாடு ஓய்விடத்திற்கு அழைத்து செல்வார். ஓரே தடவை வழங்கப்படும் ஒரு உதவித்தொகையை அவர் என்னிடம்  அளிப்பார். இந்த மொத்த தொகை கொடுப்பனவு நான் திரும்பிப்போகும் நாட்டிற்கு ஏற்ப மாறுபடும்.

  • 9. என் வருகை எப்படி நடைபெறுகிறது?

    என் நாட்டிற்கு திரும்பிய பிறகு, எனது மறுவாழ்க்கை திட்டத்திற்காக, நான் நேரடியாக OFII-உடனோ அல்லது அதன் உள்ளூர் பிரதிநிதியுடனோ தொடர்பு கொள்ள வேண்டும்.

  • 10. மறுவாழ்வு திட்டம் எவ்வாறு அமைக்கப்படுகிறது?

    OFII ஆலோசகருடன் ஏற்பாடு செய்யப்படும் தனிப்பட்ட சந்திப்பு என் தேவைகளை வரையறுக்கவும் மற்றும் எனக்கு பொருத்தமான மறுவாழ்வு நிலைக்கு வழிக்காட்டவும் உதவுகிறது. OFII  மூன்று விதமான வெவ்வேறு நிலை உதவிகளை வழங்குகிறது.

    முதலாம் நிலை உதவி : சமூக மறுவாழ்வு

    முதலாம் நிலை உதவி என் குடியேற்றத்திற்கும் மற்றும் என் குடும்பத்தின் குடியேற்றத்திற்கும் உரிய சமூக மறுவாழ்வு ஆகும். இந்த உதவி என் வாடகை, தளபாடங்கள் அல்லது உபகரணங்கள் வாங்குவது, என் மருத்துவ செலவுகள் அல்லது எனது குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்கு உதவுகிறது. பின்வரும் சொந்த நாடுகள் (ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, ஈராக், கொசோவோ, நேபாளம், நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, ஸ்ரீலங்கா) ஒன்றிலிருந்து இருந்து நான் வந்தால், விமான நிலையத்தில் உதவி, குடும்ப உறுப்பினர்களை தேடி கண்டு பிடிக்கும் உதவி, சட்ட ஆலோசனை உதவி அல்லது உளவியல் ஆலோசனை உதவி ஆகியவற்றை நான் பெற்றுக்கொள்ள முடியும்,

    இரண்டாம் நிலை உதவி : வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி

    இரண்டாம் நிலை உதவி ஊடாக  OFII  எனக்கு வேலை கண்டுபிடிக்கவும் மற்றும் ஆளுமைக் குறிப்பை எழுதுவதற்கும் உதவ முடியும், மற்றும் என் தொழிற்பயிற்சி செலவில் அல்லது சம்பளத்தில் ஒரு பகுதியை ஒரு வருடத்திற்கு நிதியாக அளிக்க முடியும்.

    மூன்றாம் நிலை உதவி : வர்த்தக உருவாக்கம்

    இறுதியாக, மூன்றாம் நிலை உதவி நான் ஒரு வியாபாரத்தை உருவாக்க எனக்கு உதவுகிறது. எனது திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டால், எனது புதிய செயல்பாடு சார்ந்த பயிற்சி ஓன்றை நான் தொடங்கலாம் மற்றும் என் வணிகத்தை தொடங்குவதற்கு நிதியுதவியையும் பெறலாம்.

  • 11. நான் என் திட்டத்தை எப்போது ஆரம்பிக்க முடியும்?

    OFII என் திட்டத்தை உறுதி செய்தவுடன், அதை சீராக்கவும், அதை செய்து முடிக்கவும் மற்றும் அதை தொடரவும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும். (தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் அங்கீகாரம் பெற்றவுடன்) சமூக மறுவாழ்வு உதவி என்றால், 6 மாதங்களுக்கும், வேலைவாய்ப்பு அல்லது வணிக உருவாக்கம் என்றால் 1 வருடத்திற்கும் OFII உதவும். 

  • 12. மறுவாழ்வு நிதியுதவி எப்படி வழங்கப்படுகிறது?

    மறுவாழ்வு நிதியுதவி பணமாக செலுத்தப்படாது. OFII அல்லது அதன் உள்ளூர் பிரதிநிதி என் திட்டத்திற்கு தேவையான பொருட்களை வழங்குனர்களிடமிருந்து இருந்து வாங்கி தரும். என் எதிர்கால வணிகத்தின் தொடக்கத்திற்கு இது மருந்துகளாகவோ, ஓரு பயிற்சியாகவோ அல்லது பொருட்களாகவோ இருக்கலாம்.